உலகம் முழுவதும் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கோனோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,455 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 303,751 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,22,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் 2,67,51,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 2,37,20,919பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு 27,27,011பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8,944 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 4,455 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 303,751 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு அமெரிக்காவில் 604,082 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 449,185 பேர் மரணமடைந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் 108,596 பேரும், ரஷ்யாவில் 118,482 பேர் மரணமடைந்துள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் 2,21,597 பேரும் இங்கிலாந்தில் 127,721 பேரும் இத்தாலி நாட்டில் 125,225 பேரும் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.
Discussion about this post