நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதே நில்லாமல் சென்று கொண்டிருக்கையில், கருப்பு பூஞ்சைத் தொற்று நோய்கள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இப்போது அதையடுத்து, பீகார் மாநிலம் பாட்னாவில் கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானதாகக் கருதப்படும் வெள்ளை பூஞ்சை தொற்று நான்கு பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவல்களின்படி, வெள்ளை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பாட்னாவைச் சேர்ந்த மருத்துவரும் ஒருவர் ஆவார். மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் இந்த பூஞ்சை வேகமாக பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை பூஞ்சை நுரையீரலை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, நாட்டில் வெள்ளை பூஞ்சை காரணமாக அதிகமான வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த புதிய வைரஸ் கருப்பு பூஞ்சையை விட ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அறிக்கையின்படி, வெள்ளை பூஞ்சை நுரையீரல், நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்க உறுப்புகள் மற்றும் வாய் உள்ளிட்ட உடலின் பல பாகங்களையும் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளை பூஞ்சை தொற்று முதலில் PMCH இன் நுண்ணுயிரியல் துறையின் தலைவர் டாக்டர் SN சிங் அவர்கள் மூலம் கண்டறியப்பட்டது. நான்கு நபர்களுக்கு கோவிட் அறிகுறிகள் இருந்ததை அடுத்து சோதனைகளை மேற்கொண்ட போது அவர்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டது. ஆனால், ஆழ்ந்த பகுப்பாய்விற்குப் பிறகுதான் இந்த நோயாளிகள் வெள்ளை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். நிபுணர்களின் தகவலின்படி, mucus culture ஐ ஆய்வு செய்ய HRCT சோதனையை மேற்கொள்ளவதன் மூலம் வெள்ளை பூஞ்சைத் தொற்றை கண்டறிய முடியும்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தகவலின்படி, இந்த வகை பூஞ்சைகள் சுற்றுச்சூழலில் வாழ்கின்றன. மண், இலைகள், உரக்குவியல்கள் போன்றவற்றில் இதைக் காணலாம். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்களுக்கு இது தொற்றும் வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
Discussion about this post