சிறந்த செய்திகளுக்கு சன்மானம் தரும் புதிய அறிவிப்பு ஒன்றை கூகுள் அறிவித்துள்ளதை அடுத்து இந்திய செய்தி நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன
ஏற்கனவே கூகுள் நியூஸ் மற்றும் கூகுள் டிஸ்கவர் ஆகியவற்றின் மூலம் ஊடகங்களுக்கு வாசகர்களின் எண்ணிக்கை பெருகி வருவது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது ஷோகேஸ் என்ற புதிய அம்சத்தை இந்தியாவில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஏற்கனவே ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
இதில் சிறந்த செய்திகளை தரும் செய்தி நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் சன்மானம் தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு இந்தியாவில் இந்தி மற்றும் ஆங்கில செய்திகளுக்கு மட்டும் இந்த வசதியை செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் தமிழ் உள்பட அனைத்து மொழிகளுக்கும் இந்த வசதி வரும் என்றும் கூறப்படுகிறது. சிறந்த வசதிகளை தரும் தரமான ஊடகங்களுக்கு இனி கூகுள் சன்மானம் வழங்கும் என்ற அறிவிப்பு அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post