‘கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கும்’ என, வெள்ளை மாளிகை உறுதியளித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளதாவது:
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தக் கடினமான நேரத்தில் அமெரிக்கா தனது முக்கியமான நட்பு நாடுகளுக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் என்பதை ஆராய்ந்து தொடர்ந்து செயல்படும்.
கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடும் இந்தியாவுக்கு 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கொரோனா மருத்துவ உதவிகளை வழங்குமாறு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து பல விதமான உதவிகளை வழங்கயிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post