கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள சூறாவளி தாக்குதல் உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று ஒரு ஆய்வை மேற்கொண்டார். மேலும் கொரோனா சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சுகாதார வசதிகளும் சூறாவளி தாக்குதலுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பாக வலியுறுத்தினார்.
மே 18 ஆம் தேதி காலையில் டவ் தே குஜராத் கடற்கரையை எட்டும் என்று எதிர்பார்க்கப் பட்டுள்ள நிலையில், காற்றின் வேகம் மணிக்கு சுமார் 150-160 கி.மீ வேகத்தில், அதிக மழை மற்றும் புயல் வீசும். எனது இந்த சூறாவளியினால் மருத்துவமனைகள் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தப்பட்ட கூடாது என்பதில் மாநில அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சூறாவளியில் பாதிக்கக்கூடிய சுகாதார மையங்களுக்காக, அவற்றைப் பாதுகாக்க போதுமான ஏற்பாடுகள் மற்றும் நோயாளிகளை வெளியேற்றுவதற்கும் உள்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்கள் சுகாதார மையங்கள் மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அமைச்சருக்கு உறுதியளித்தனர்.
மருத்துவமனைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதையும் சுகாதார வசதிகளையும் உறுதி செய்வதற்காக மின் உற்பத்தி நிலையங்களின் பாதுகாப்பிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறும் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
Discussion about this post