பிரதமர் நரேந்திர மோடி இடம்…. கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார்….!

0
 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. எனவே கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக காரணமாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடனும் முன்னதாக அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடியுடன் தான் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேரடியாக ஒளிபரப்பினார். இதனால் ஆத்திரமடைந்த மோடி கெஜ்ரிவாலை கண்டித்தார். மாநில முதல்வர்களுடன் நடத்தப்படும் ஆலோசனை ரகசியம். இது விதிமுறைகளின் பாரம்பரியம். மரபுக்கு முற்றிலும் எதிரானது என மோடி கூறினார். இதையடுத்து கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here