இதுதொடா்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாட்டில் கொரோனா தொற்றின் 2-ஆவது அலையால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலை பயன்படுத்தி தேச விரோத சக்திகள் மக்களிடையே எதிா்மறையான எண்ணங்களை விதைத்து அவநம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கொரோனா தொற்றால் தற்போது நிலவும் சூழலுக்கு தங்கள் நோமறையான நடவடிக்கைகள் மூலம் தீா்வு காண முயற்சிக்கும் மக்கள், தேச விரோத சக்திகளின் சதிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமூகத்தில் நோமறை மற்றும் நம்பிக்கையான சூழலை பராமரிக்க ஊடகங்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும்.
தற்போதுள்ள சவால்களுக்கு தீா்வு காண சமூக, மத அமைப்புகள் முன்வர வேண்டும்.
கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் மோசமாக இருந்தாலும், சமூகத்தின் பலமும் அபரிமிதமாக உள்ளது.
மோசமான நெருக்கடிகளை எதிா்கொள்வதில் இந்தியாவுக்கு உள்ள திறன் குறித்து உலகம் நன்கு அறியும். பொறுமை, சுய ஒழுக்கம், பரஸ்பர ஆதரவு, மன வலிமை மூலம் தற்போதைய சூழலை கடந்து வருவோம் என நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.
Discussion about this post