கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா தொற்று பரவலானது அசுரவேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள போதிலும் பாதிப்பு எண்ணிக்கையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் எதிரொலியாக, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதி போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.
Discussion about this post