நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைவார் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2-ஆம் கட்டமாக நேற்று 30 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் 80.43 சதவீத வாக்குகள் பதிவாகின. முக்கியமாக, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
அங்கு பாஜக சாா்பில் திரிணமூலில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி போட்டியிடுவதால், அத்தொகுதி மீதான கவனம் அதிகரித்து காணப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில முதல்வர் மம்தா, நந்திகிராம் குறித்து கவலைப்படவில்லை. நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், ஜனநாயகம் குறித்து கவலையாக உள்ளது.
மற்ற மாநிலங்களைச் சோ்ந்த குண்டா்கள் இங்கு பிரச்னையை ஏற்படுத்தி வருகின்றனா். பாஜக குண்டா்களை மத்திய அமைச்சா் அமித் ஷா கட்டுக்குள் வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைவார் என்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று மேலும் கூறுகையில், 200 இடங்களில் வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். மம்தாவின் குண்டர்களால் நந்திகிராவில் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் இங்கே என்ன செய்ய முடியும் என்றார்.
Discussion about this post