ஸ்டாலின்… உங்க பழைய மந்திரியை கூட்டிட்டு இங்கே வாய்யா… பக்கத்துணையாக ஆளை வைத்து வரிந்து கட்டிய எடப்பாடியார்..!

0
அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒவ்வொரு பிரச்சாரத்திலும் பதிலடி கொடுத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதி பிரச்சாரத்தில் இன்னும் உச்சநிலைக்கு சென்றுவிட்டார். அங்கே அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மருது அழகுராஜ். கழக செய்தி தொடபாளர். நமது அம்மா நாழிதழில் ஆரிசியர். 
இன்று அங்கு அவருக்காக பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி ”நான் போகிற இடத்தில் எல்லாம் தெளிவாகத்தான் பேசிக்கொண்டு வருகிறேன். ஸ்டாலின் அவர்களே எங்க மேல குற்றம் இருந்தா சொல்லுங்க. நாங்க பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். வா… இங்க திருப்பத்தூருக்கே வா… உங்க பழைய மந்திரி இருக்காரு இங்கே… அவரு கூட நிற்கட்டும்… எங்க வேட்பாளர் மருது அழகுராஜ். அற்புதமாக பேசக்கூடியவர். சிந்தித்து செயல்படக்கூடியவர். இதுமாதிரி ஒரு ஸ்டேஜ் போடலாம். ஏற்பாடு பண்ணச்சொல்றேன். 
இங்கேயே நீ ஒரு மைக்கைப்பிடி நான் ஒரு மைக்கைபி பிடிக்கிறேன். எங்க மேல குற்றம் சுமத்துறியா நாங்க பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். நாங்க கேட்குற கேள்விக்கு நீ பதில் சொல்லணும். நீ கேட்குற கேள்விக்கு நான் பதில் சொல்லத்தயார். ஆனா, அதுக்கு மட்டும் வரவே மாட்டேங்குறார். ஊழல்… ஊழல்… வா… பேசு.! மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும். அவர்கள்தான் நீதிபதிகள். வரமாட்டேங்குற. ஏன்னா.. உங்ககிட்ட உண்மையே கிடையாது. பேசுறது பூரா பொய்தான்.. பொய்யைத்தான் மூலதனமா வச்சிக்கிட்டு இருக்கிறாரு. பொய்யை பேசி பேசி மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி கொல்லைப்புறத்தின் வழியாக ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். அது ஒருகாலமும் முடியாது. தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்க தெரிந்தவர்கள்” என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. முதல்வரின் இந்த சவால் பேச்சைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்தனர்.
இன்னொருபுறம் தெளிவாகவும், ஆழமாகவும் பேசக் கூடிய, கட்டுரைகள் எழுதி அதன் மூலம் எதிர்கட்சியினரை திக்குமுக்காடச் செய்யும் மருது அழகுராஜ் அருகில் இருந்ததால் இப்படி எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here