நேற்று தனது 2 வது நாள் தேர்தல் பரப்புரையை சென்னை எழும்பூர் பகுதியில் தொடங்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் வந்து கையசைத்து விட்டு எதுவும் பேசாமல் புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், கடந்த 24 ம் தேதி தனது தேர்தல் பரப்புரையை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் தொடங்கினார். அப்போது, கும்மிடிப்பூண்டி தொகுதி தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லி, பொன்னேரி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் பொன்.ராஜா ஆகிய இருவரை ஆதரித்து கும்மிடிப்பூண்டி பஜாரில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திறந்த வெளி வாகனத்தில், தொண்டர்களை பார்த்து கையசைத்தபடியே விஜயகாந்த் வந்தார். சிறிது நேரத்தில் விஜயகாந்த் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தொண்டர்கள் அவரசு பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், வாகனத்தில் உள்ளே சென்று விஜயகாந்த் அமர்ந்து கொண்டார். உடல்நலக் குறைவால் வாகனத்தில் அமர்ந்தபடியே விஜயகாந்த் பேசுவார் என பின்னர் கூறப்பட்டது, தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், விஜயகாந்த் எதுவும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.சென்னை எழும்பூர் தொகுதியில் 2வது நாள் தேர்தல் பரப்புரையை விஜயகாந்த் சேத்துப்பட்டு பகுதியில் நேற்று தொடங்கினார்.பின்னர், ஊர்வலமாக புளியந்தோப்பு பகுதிக்கு வந்தார். புளியந்தோப்பு, ஒரு பகுதி எழும்பூர் தொகுதியிலும், மற்றொரு பகுதி திரு.வி.க.நகர் தொகுதியிலும் வருவதால் 2 தொகுதி வேட்பாளரும் ஒரே இடத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது, திறந்த வெளி வேனில் மக்கள் மத்தியில் தோன்றிய விஜயகாந்த். கட்சித் தொண்டர்களையும், மக்களையும் பார்த்து கையசைத்தார். கைகூப்பி வணங்கினார். முதல் நாள் பிரச்சாரத்தில் தான் விஜயகாந்த் பேசவில்லை, எனவே, சென்னை பரப்புரையில் பேசுவார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இங்கேயும் சைகை மூலம் மட்டுமே வாக்கு சேகரித்துவிட்டு விஜயகாந்த் புறப்பட்டு சென்றர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த் பேச்சை கேட்பதற்காக ஆவலுடன் வந்திருந்த அக்கட்சி தொண்டகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். உடல் நிலை சரியில்லாதவரை இந்த கொரோனா நேரத்தில் வெறும் வாக்குக்காக வாகனத்தில் சுற்றவைப்பது சரியில்லை என சொந்த கட்சி தொண்டர்களே கடிந்து பிரேமலதா விஜயகாந்தை கடிந்து கொண்டது குறிப்பிடதக்கது.
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post