20 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என மாநில தலைவரும், தாராபுரம் வேட்பாளருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 17 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது என்றும், மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கூடிய விரைவில் வெளியிடப்படும் எனக்கூறினார்.
அனைவரும் துடிப்போடு எதிரிகளை களத்தில் களமாட தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்ட அவர், தாராபுரம் மக்களின் கோரிக்கையான மருத்துவமனை, மகளிர் கல்லூரி ஆகியவைகளை நிறைவேற்றுவோம் என கூறினார்.
ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட விரும்பமில்லை என கு.க.செல்வமே தெரிவித்து விட்டார் எனக்கூறிய அவர், வரும் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், விரைவில் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.
Discussion about this post