பாஜக சார்பில் நடிகை குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக சார்பில் அந்த 20 பேர் யார் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் 20 பேர் கொண்ட பட்டியல் டெல்லி தலைமைக்கு அனுப்பப்பட்ட நிலையில், பாஜகவின் உச்சபட்ச அதிகாம் கொண்ட குழுவினர் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அதன்பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பூ போட்டியிடுவார் என்று பேசப்பட்ட நிலையில் அந்த தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதனால் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ போட்டியிடுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Discussion about this post