செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுக – பாஜக கூட்டணியில் 5 சீட் கொடுக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம். ரஜினி அரசியல் கொள்கைகளோடு நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அவருடைய ஆதரவு நிச்சயமாக எங்களுக்கு இருக்கும். அமமுக, சரத்குமார், கமல் அவர்களோடு நாங்கள் செல்ல முடியாது.
கோவக்ஷின் தடுப்பூசி நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழகத்திலே வெகு நல்ல முறையிலே சிறப்பாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கொரோனா தடுப்பூசி குறித்து மிகப்பெரிய அளவிலே வெறுப்புணர்வை விதைத்து வந்தார்கள் இடதுசாரிகள், திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள்.
இன்றைக்கு அவர்கள் எல்லாரும் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்கிற காட்சியை நாங்கள் பார்க்கின்றோம்.
எனவே இனிமேலாவது கொரோனா தடுப்பு பணி குறித்து அவதூறு பரப்புவதை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதே போல முழுக்க முழுக்க ராகுல் காந்தி அவர்கள் பிரச்சாரத்திற்கு வருகிறபொழுது, கிறிஸ்துவ நிறுவனங்கள் முழுமையாக அவரோடு கைகோர்த்து செயல்படுகின்றன. அவருடைய அனைத்து சுற்றுப்பயணங்களில் நாம் இதை தெள்ளத்தெளிவாக வெளிப்படையாக பார்க்கின்றோம். ராகுல்காந்தி இந்திய தேசிய காங்கிரஸை ரோமன் கத்தோலிக்க காங்கிரசாக மாற்றிவிட்டார். அவர் நிச்சயமாக தமிழகத்திலே தோற்கடிக்கப் படுவார் என தெரிவித்து கொள்கின்றேன்
Discussion about this post