மாநகராட்சி தேர்தல்களைப் போல குஜராத் உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
அண்மையில் குஜராத் மாநகராட்சி தேர்தல்களில் பாஜக மிகப் பெரும்பாலான இடங்க்ளை கைப்பற்றி சாதனை படைத்தது. காங்கிரஸ் கட்சி 2-வது இடத்திலும் சில இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும் வென்றன.
இந்த நிலையில் குஜராத்தின் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. 980 மாவட்ட பஞ்சாயத்து இடங்களில் 403-ல் பாஜக வென்றுள்ளது; காங்கிரஸ் 75; ஆம் ஆத்மி 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
இதே போல் வட்டார பஞ்சாயத்துகளில் 1620 இடங்களில் பாஜக வென்றுள்ளது; காங்கிரஸ் 368 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
நகராட்சிகளில் பாஜக 1,395 இடங்களில்; காங்கிரஸ் 365 இடங்களில் வென்றுள்ளது.
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக களம் இறங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க்கது.
Discussion about this post