நடிகர் ரஜினிக்கு நெருக்கமான அர்ஜுன மூர்த்தியின் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ரோபோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தொடங்குவதாக இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த ரா. அர்ஜுன மூர்த்தி நேற்று முன்தினம் இந்திய மக்கள் முன்னேற்ற கழகம் (இமமுக) என்கிற கட்சியை தொடங்கினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இமமுக போட்டியிட இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் அர்ஜுனமூர்த்தியின் கட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று தலைமை தேர்தல் ஆணையம் அர்ஜுன மூர்த்தியின் இமமுக கட்சிக்கு 234 தொகுதிகளிலும் ரோபோ சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
ரஜினி நடித்த ‘எந்திரன், 2.0’ ஆகிய திரைப்படங்களின் பிரதான கதாபாத்திரமான ரோபோ தனது கட்சிக்கு சின்னமாக கிடைத்திருப்பதால் அர்ஜுனமூர்த்தி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Discussion about this post