கலாச்சாரத்தை அவமரியாதை செய்த மேற்குவங்க ஆட்சியாளர்கள்….. ஜெ.பி.நட்டா

0
மேற்குவங்கத்தை கடந்த 40ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் கலாச்சாரத்தை புண்படுத்தியுள்ளார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா  தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மேற்குவங்க மாநிலத்தில் பிரச்சாரத்தில் நட்டா பேசுகையில்,
கடந்த 30-40 ஆண்டுகளில், வங்கத்தை ஆண்ட அரசாங்கங்கள், வங்கத்தின் கலாச்சாரத்தை புண்படுத்தியுள்ளார்கள். இருப்பினும், கடந்த 6 ஆண்டுகளில் பிரதமர் மோடி, நாட்டின் அரசியல் வரையறையை மாற்றியுள்ளார்.
நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், மாநிலத்தில் இணைப்பை மேம்படுத்த கொல்கத்தா-சிலிகுரி சாலைக்கு ரூ. 25,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக ரூ .1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் பாலியல் வழக்குகள் அதிகம் உள்ள மாநிலத்தில் இரண்டாவதாகவும், குழந்தை திருமணத்தில் மூன்றாவது மாநிலமாகவும் மேற்குவங்கம் உள்ளது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here