ஊழலுக்காக உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக தான் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுக செய்த தொடர் ஊழலால் 23 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்காமல் மக்கள் திமுகவை தண்டித்துள்ளனர் எனவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது, இந்நிலையில் அதை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் அதில் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே நேரெதிர் போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் முன்கூட்டியே இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஊழலுக்காக உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். மேலும் தனது டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக, பஞ்சபூதத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு என மக்கள் உடமைகளை ஈவுஇரக்கமின்றி பறிக்கும் கட்சி திமுக தான். தமிழ் நாட்டில் ஊழலை அறிமுகம் செய்ததும் இந்த திமுக தான்.
ஒவ்வொரு முறை அதிகாரத்திற்கு வரும் போதும் ஒவ்வொரு விதமான ஊழல்ர உலக அளவில் ஊழல் வரலாற்றில் இடம் பிடித்த கட்சியும் ஆட்சியும் திமுகதான். திமுகவினர் எங்கள் மீதாக சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, தண்டனை அனுபவிக்கவில்லை விவாதிக்க தயாரா? என்று பயத்தில் நடுங்கி உளறுவார்கள், நெருப்பில்லாமல் புகையாது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பட்டியலிட்ட ஊழல் புகார்களால் 13 ஆண்டுகள், அலைக்கற்றை ஊழலால் 10 ஆண்டுகள் என 23 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்காமல் மக்கள் திமுகவை கண்டித்துள்ளனர். இனியும் தண்டிப்பார்கள். என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Discussion about this post