தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் தேமுதிக தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்ப மனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் 25- 2-2021 வியாழக்கிழமை முதல் 5-3-2021 வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து தலைமையகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கு, தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தொகுதிகள் விருப்பமனு கட்டணமாக ரூபாய் 15,000 தமிழ்நாடு சட்டமன்ற தனி தொகுதிகள் விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொது தொகுதிகளுக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனி தொகுதிகள் உறுப்பினர் கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணிக்குழு செயலாளர்கள், தமிழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வார்டு கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளும் மற்ற கழகத் தொண்டர்களும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post