லோக்சபாவில் அவர் பேசியதாவது: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு தற்காலிகமாக தான் வழங்கப்பட்டிருந்தது. நாட்டிற்கு, தற்போது அது தேவையில்லை. காஷ்மீர் வளர்ச்சி பெற காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை. காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டதிருத்தம் 2021, மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து அல்ல. காஷ்மீருக்கு சரியான காலத்தில் முழு அந்தஸ்து அளிக்கப்படும்.
மற்ற மாநில மக்கள் பெறும் சலுகைகளை பெற காஷ்மீர் மக்களுக்கும் உரிமையுண்டு.சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு அங்கு பஞ்சாயத்து ராஜ் தேர்தல் நடத்தப்பட்டது. 51 சதவீத வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். தேர்தல் அமைதியாக நடந்தது.பல ஆண்டுகளாக காஷ்மீரை 3 குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி செய்தது.காஷ்மீரை தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற விரும்புகிறோம். காஷ்மீர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
கடந்த 17 மாதங்களில் காஷ்மீரில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 50 ஆயிரம் குடும்பங்கள் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் வந்துள்ளது. 4 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. தடுப்பூசி முகாம், காஷ்மீரில் அமைதியாக நடக்கிறது. மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பணிகள் நடக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Discussion about this post