குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் தளபதி உள்பட ஐந்து காவல் படையினர் கொல்லப்பட்டனர் என்று மாகாண சபை உறுப்பினர் தின் முகமது தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இருதரப்பிலும் தொடர்ந்து சமாதான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகின்றது.
முன்னதாக, நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் காவல்துறை வாகனத்தைக் குறிவைத்துத் தாக்கப்பட்ட வெடிவிபத்தில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று நங்கர்ஹார் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Discussion about this post