மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோவிலில் 26 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நூறும் பாலும் மற்றும் சர்ப்ப பலி பூஜை நடைபெற உள்ளது.
கோவிலில் உள்ள நாகராஜா நாக யக்ஷிக்கு ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு இப்பூஜை நடைபெறுகிறது.
நூறும் பாலும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை சர்ப்ப பலி பூஜையும் நடைபெறும்.
பாம்புமேக்காடு சேர்ந்த பிரம்ம ஸ்ரீ சங்கர நாராயணன் நம்பூதிரி முக்கிய ஆச்சரியமாக இருந்து பூஜையை வழிநடத்துகிறார்.
044-28171197, 2197, 5197 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் ayyappantemplesabs.org இணையதள முகவரியிலும் முன்பதிவு செய்யுமாறு கோவில் நிர்வாக அதிகாரி அனிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post