உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 197 பேர் காணாமல் போயுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
சுமார் 2.5 கி.மீ. தொலைவு கொண்ட சுரங்கப் பாதையில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மீட்புப் பணிகள் குறித்து உத்தரகண்ட் காவல்துறை தலைவர் கூறுகையில்,
இன்று(பிப்.8) இரவு 8 மணி நிலவரப்படி 26 பேரில் சடலங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் 171 பேர் காணாமல் போயுள்ளனர். அதில் 35 பேர் வரை சுரங்கத்தில் மாட்டிக் கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Discussion about this post