இந்தியாவில் உணவு வினியோகம், மின்னணு வர்த்தகம், ஆன்லைன் காப்பீடுகள் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும், இணைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகளுக்கு வருவது குறித்து ஆர்வமாக இருக்கின்றன.
‘எச்.எஸ்.பி.சி., குளோபல்’இத்தகைய நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2025ல், 180 பில்லியன் டாலராக இருக்கும் என, ‘எச்.எஸ்.பி.சி., குளோபல்’ ஆய்வு தெரிவித்துள்ளது. இது, இந்திய மதிப்பில், 13.14 லட்சம் கோடி ரூபாயாகும்.இது குறித்து, ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில், இணைய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், 4.38 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்த துறையில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், மூதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ‘யுனிகார்ன்’கடந்த, 2020ம் ஆண்டில் மட்டும், 87 ஆயிரத்து, 600 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2025ல், நிதி தொழில்நுட்ப நிறுவனங்களை சேர்க்காமல், இந்த துறையின் மொத்த மதிப்பு, 13.14 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது, 42 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட, ‘யுனிகார்ன்’நிறுவனங்களாக உள்ளன. மேலும், ‘யுனிகார்ன்’ நிலைக்கு வருவதற்கு தகுதி படைத்தவையாக, 45 நிறுவனங்கள் உள்ளன.இந்நிலையில், பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்களை மேம்படுத்தவும்; புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும் தேவையான நிதியை, புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டும் திட்டத்தில் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.