ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே நடைபெற்ற மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள கானாபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 10 தலிபான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 26 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post