பினராயிக்கு தங்கத்தின் மீது அதிக பிரியம்…. உம்மன்சாண்டிக்கு சோலார் மீது கண்… தேசிய தலைவர் நட்டா பேச்சு

0

 

”ஒரு முதல்வருக்கு (பினராயி விஜயன்) தங்கத்தின் மீது அதிக பிரியம் என்றால் மற்றொருவருக்கு (உம்மன்சாண்டி) சோலார் மீது கண். பிரதமர் மோடி செய்யும் நல்ல காரியங்களை தெய்வத்தின் சொந்த நாடான கேரளாவிலும் கொண்டு வர விரும்புகிறோம்” என பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா பேசினார்.
திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேலும் அவர் பேசுகையில், ”கேரளாவில் மா.கம்யூ., அரசு முழுமையாக ஊழலில் மூழ்கியுள்ளது. ஊழலும், மோசடிகளும் கேரளாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது. ஊழலில் பெண்களின் பங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
இது பணத்துக்கான ஊழல் மட்டுமல்ல. அதற்கும் அப்பாற்பட்டது. திறமையின்மை மற்றும் செயலற்ற தன்மை கொண்ட அரசாக பினராயி அரசு விளங்குகிறது. பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கொரோனாவை கையாள மத்திய அரசு கொடுத்த அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியுள்ளனர்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here