அயோத்தியில் மசூதி கட்டும் திட்டத்துக்காக வழங்கப்பட்ட நிலம் தங்களுக்கு சொந்தமானது

0

 

டெல்லியைச் சேர்ந்த சகோதரிகள் மனுவின் அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், இது பிப்ரவரி 8-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராணி கபூர் என்கிற ராணி பலுஜா மற்றும் ரமா ராணி பஞ்சாபி என்ற சகோதரிகள் தாக்கல் செய்திருக்கும் ரிட் மனுவில், அவர்களது தந்தை கியான் சந்திரா பஞ்சாபி, 1947 இந்திய பிரிவினையின்போது, பஞ்சாப்பில் இருந்து தற்போது அயோத்தி என்றழைக்கப்படும் ஃபைசாபாத் மாவட்டத்தில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவருக்கு, அரசால் 28 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அந்த நிலம் தொடர்பான வழக்கு தற்போது நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த 28 ஏக்கர் நிலத்திலிருந்து 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்துக்கு, மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மசூதி கட்டும் திட்டம் குடியரசு தினமான செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்கிய நிலையில், இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ராமஜென்மபூமி வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபா் மசூதி இருந்த இடத்தில் ராமா் கோயில் கட்ட அனுமதியளித்தது. அதேவேளையில் அந்த வழக்கின் எதிா்மனுதாரரான சன்னி வக்ஃபு வாரியத்துக்கு மசூதி கட்டுவதற்காக மாற்று இடம் வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அயோத்தியில் உள்ள தனீப்பூா் கிராமத்தில் மசூதி கட்ட மத்திய அரசு 5 ஏக்கா் நிலம் வழங்கியது. அந்த இடத்தில் மசூதி, மருத்துவமனை அடங்கிய வளாகம் கட்டப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here