வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் சார்பில் குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசாரும், விவசாயிகளும் காயமடைந்தனர்.
இதனிடையே விவசாயி ஒருவர் வேகமாக ஓட்டிவந்த டிராக்டர் கவிழ்ந்ததில் அவர் பலியானார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையே இதுகுறித்து டுவிட்டரில் உண்மைக்கு மாறான கருத்தை வெளியிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மூத்த பத்திரிகையாளர்கள் 6 பேருக்கு எதிராக நொய்டா, டெல்லி, மத்தியபிரதேச போலீசில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி சசி தரூர், பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் செய்துள்ளனர். அந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post