போராட்டத்தில் வெளிநாட்டு பிரபலங்களின் கருத்துக்கு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எதிர்ப்பு

0

 

வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் தில்லியில் கடந்த2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் தடுப்புகளை மீறி தில்லிக்குள் விவசாயிகள் நுழைந்த நிலையில் விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இதனால் தில்லி எல்லை வன்முறைகளமாக காட்சியளித்தது. 
இதையடுத்து வெளிநாட்டு அரசியல் பிரபலங்கள் பலர் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், இந்தியாவின் இறையாண்மை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம், ஆனால் நமது உள்நாட்டு விவகாரங்களில் பங்கேற்க முடியாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும், இந்தியர்களே முடிவு எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here