கர்நாடகா மாநிலத்தில் சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். தவனகரே பகுதியிலிருந்து சுற்றுலா வேன் ஒன்றில் 17 பேர் கோவா நோக்கி சென்றுள்ளனர். அவர்கள் சென்ற வேன் கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் வேனும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் அதிவேகமாக மோதிக்கொண்டதில் இரண்டு வாகனமும் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலையே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5 பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில்லையே உயிரிழந்தனர். இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த 12 பேர் மற்றும் அந்த வாகனத்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் அந்த வாகனத்தில் பயணம் செய்த மொத்தம் 17 பெண்களும் கர்நாடக மாநிலம் தவனகரேயில் உள்ள செயின்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்தவர்கள்.
தற்போது 35 முதல் 40 வயதுக்குள் இருக்கும் இவர்கள் அனைவரும் பள்ளியில் படிக்குப்போதில் இருந்து தற்போது வரை உயிர் தோழிகளாக இருந்துள்ளனர். மேலும் இவர்களில் இரண்டு பேர் மருத்துவர்கள், மற்றவர்களும் நன்கு படித்து நல்ல வேலையில் வேறு வேறு ஊர்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பள்ளி தோழிகளான இவர்கள் தங்கள் நட்பை இன்றுவரை தொடர்ந்துவரும் நிலையில் ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா செல்வத்தையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் 17 தோழிகளும் முடிவு செய்து மகா சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக 17 பெரும் கோவா சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி டெம்போ வாகனம் ஒன்றை புக் செய்து அதில் பயணம் செய்துகொண்டிருந்தபோது இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 17 பேரில் ஒருவரான பெண் மருத்துவர் வீணா உட்பட 11 தோழிகளும், வேன் ஓட்டுனரும் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்து குறித்து இந்திய பிரதமர் மோடி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post