கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா-சீனா இடையே அணுசக்தி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலிருந்தும் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், இறையாண்மை கொண்ட தைவானை சீனா தனது ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதுவது குறித்து இரு தரப்பினரும் பேசினர்.
தைவானை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என அமெரிக்காவிடம் சீனா உறுதியளித்ததாக பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.