2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் புதிய இந்தியா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மத்திய பட்ஜெட் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி புதுமை மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சியையும் ஊக்குவிப்பதாக அவர் பாராட்டினார்.
நிதியமைச்சர் ஒன்பது துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு எதிர்காலத்திற்கு தெளிவான பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் பாராட்டினார்.
உற்பத்தி, சேவைகள் மற்றும் சுற்றுலாத் துறைகளை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்தியாவை திறமையான போட்டியாளராக மாற்றுவதற்கு மத்திய பட்ஜெட் அடித்தளம் அமைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post