உண்மையை நகைச்சுவையுடன் கலந்து இந்திய கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்திய பாஜக எம்பி அனுராக் தாக்கூருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாஜக எம்பி அனுராக் தாக்கூர், மத்திய அரசு மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து, போஃபர்ஸ், நேஷனல் ஹெரால்டு, 2-ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளை குறிப்பிட்டார்.
மேலும், ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக ராகுல் காந்திக்கு அனுராக் தாக்கூர் பதிலளித்தார். அனுராக் தாக்கூரின் பேச்சுக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய கூட்டணியின் மோசமான அரசியலை அம்பலப்படுத்த நகைச்சுவையுடன் உண்மையை கலந்து பேசியதாக கூறியுள்ளார்.
இளம் எம்பி அனுராக் தாக்கூரின் பேச்சை அனைவரும் அவசியம் கேட்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post