சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2,600 சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2,600 சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் காயம்
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வீராங்கனை ரித்திகா காலிறுதியில் தோல்வி
33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தப் போட்டியின் காலிறுதிப் போட்டியில் (76 கிலோ எடைப் பிரிவு) இந்தியாவின் ரித்திகா ஹூடாவும், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கிர்கிஸ்தானின் ஐபெரி மெடாட்டும் மோதினர். இந்தப் போட்டியில் ரித்திகா போராடி கடைசி நிமிடத்தில் டை பிரேக்கரில் தோற்றார். இதன் மூலம் ஐபெரி மெடெட் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்
ஆம்ஸ்ட்ராங்கின் 2 வயது மகள் உட்பட அனைவர் மீதும் வழக்கு போடுவது நியாயமற்றது… அன்புமணி ராமதாஸ்
இந்த கொலையில் மறைந்துள்ள அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, 2 வயது குழந்தை உட்பட 1500க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். நீதி கேட்டு போராடுபவர்களுக்கு நீதி கிடைக்காமல் வழக்கு தொடர்வது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேச உச்ச நீதிமன்றத்தை இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
வங்கதேசத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அனைத்து இடங்களிலும் முஸ்லிம்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், இன்று பங்களாதேஷ் உச்ச நீதிமன்றத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரத்தில் பிரதம நீதியரசர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
Discussion about this post