கையில் குடையை ஏந்தி விவசாயிகளை நனையாமல் பாதுகாத்த… பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழை பெய்ததால், அதிகாரிகள் குடை பிடிக்க பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்தார். அதை மறுத்த பிரதமர் மோடி, கையில் குடையை ஏந்தி மற்றவர்கள் நனையாமல் பாதுகாத்தார். கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், திட்டத்தை ஒத்திவைக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்த போதிலும், விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் மோடி அதை ஏற்க மறுத்துவிட்டார்.
வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்துக்களுடன் பேச்சுவார்த்தை… முகமது யூனுஸ் முடிவு
வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்து மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு ஆலோசகர் முகமது யூனுஸ் முடிவு செய்துள்ளார். ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, இந்துக்கள் உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில், வங்கதேச அரசின் ஆலோசகராக பதவியேற்றுள்ள முகமது யூனுஸ், இந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்தார்.
தருமபுர ஆதீனத்திற்கு வழநெடுங்கிலும் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆச்சாள்புரம், பரசலூர் பகுதிகளில் உள்ள சிவலோகதியாகராஜசுவாமி, வீரட்டேஸ்வர சுவாமி கோவில்களில் கும்பாபிஷேக விழாவிற்கு புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்தை வழியெங்கும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…
ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த வழக்கின் விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துவதாகவும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது சாட்சிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் நாட்டில் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி… ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டு
ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் நாட்டில் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி, மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பொருளாதார சீரழிவு மற்றும் உறுதியற்ற தன்மையை உருவாக்க காங்கிரஸ் கட்சி தனது அமைப்புகளுடன் இணைந்து முயற்சிப்பதாக விமர்சித்தார். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருந்த ஹிண்டன்பர்க், செபியின் நோட்டீசுக்கு பதிலளிக்கவில்லை என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் கூறியதாகவும் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.
தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம்
சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசியக் கொடி பாதுகாப்பு வழங்குவது அவமானம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கொடி ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிய நீதிபதி, இடையூறு செய்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post