2047 வருடத்திற்குள் இந்தியா வல்லரசு ஆகும்…. சர்வதேச நிதிய துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத்
2047 வருடத்திற்குள் இந்தியா வல்லரசு ஆகும். வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3 – வது பொருளாதாரமாக உயரும் என சர்வதேச நிதிய துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத் கணித்துள்ளார்.
மூடா ஊழல் வரை காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்கிறது… அமைச்சர் ஜே.பி.நட்டா
நேஷனல் ஹெரால்டு முதல் கர்நாடகாவில் மூடா ஊழல் வரை காங்கிரஸ் கட்சியின் ஊழல் வரலாறு தொடர்கிறது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வடமாநில மக்கள் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி….
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பப்பாளி மாவு, பேப்பர் கூழ், சிறு குச்சிகள், தேங்காய் நார்களை பயன்படுத்தி ஒரு அடி முதல் 10 அடி வரை கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வடமாநில மக்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர்.
பிரபல ரவுடி நாகேந்திரன், அஸ்வத்தாமன் வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன் வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவல். இதனிடையே, அஸ்வதாமன், நாகேந்திரன் ஆகியோரின் 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்து, அவர்கள் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அஸ்வத்தாமனை 21ம் தேதி வரையும், ரவுடி நாகேந்திரனை 28ம் தேதி வரையும் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்… மகளிர் மேம்பாடு மன்றம் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம்
வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களை எதிர்கொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பெண்கள் மேம்பாட்டு கவுன்சில் ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார்…
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டையொட்டியும், சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான அதிநவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை திறந்து வைப்பதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார்.
மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை பெற குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளைப் பெறவும் பரிந்துரைக் குழு அமைக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. குழுவிற்கு பரிந்துரைகளை வழங்க மாநில அரசுகள் உட்பட அனைத்து பிரதிநிதிகளும் அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
வயநாட்டில் காணாமல் போனவர்களை தேடி வந்த தீயணைப்பு துறையினர், நான்கு லட்சம் ரூபாயை மீட்டு போலீசில் ஒப்படைப்பு…
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். சூரல்மலை பகுதியில் உள்ள வேலர்மலை பள்ளிக்கு பின்புறம் உள்ள ஆற்றில் பிளாஸ்டிக் சுற்றப்பட்ட நான்கு லட்சம் ரூபாயை தீயணைப்பு துறையினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
குரங்கம்மை, நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை
ஆப்பிரிக்கா, காங்கோ. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புபவர்களை கண்காணிக்க விமான நிலையத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் குரங்கம்மை பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டெல்லியில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.
Discussion about this post