சென்னையில் இன்று நடைபெறும் விழாவில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக ரூ.100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு அனுமதி கேட்டிருந்தது. அதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இந்நிலையில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா இன்று மாலை 6.50 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.
தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post