தனிநபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது… உச்ச நீதிமன்றம் கண்டனம்
தனிநபர் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது உச்ச நீதிமன்றம் கண்டனம். மேலும், யார் குண்டர்கள் என்பதை தமிழக அரசு தீவிரமாகச் சிந்தித்து, குண்டர் சட்டத்தில் யாரைப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருக்க வேண்டும் என்றும், குண்டர் சட்டத்தை பொதுவாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
2வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை வியன் முல்டரும், தொடர் நாயகன் விருதை கேசவ் மகராஜும் தட்டிச் சென்றனர்.
பயங்கரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்…. அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு
பயங்கரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு. பயங்கரவாதி ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க-இந்தியா நாடு கடத்தல் ஒப்பந்தம் ராணாவை நாடு கடத்த அனுமதிக்கிறது என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்.
சென்னையில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக ரூ.100 நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியீடு
சென்னையில் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீடு. தமிழக அரசு சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
கேப்டனாக இல்லாவிட்டாலும் விராட் கோலி தான் தலைவராக இருக்கிறார் பும்ரா
கேப்டனாக இல்லாவிட்டாலும் விராட் கோலி தான் தலைவராக இருக்கிறார் பும்ரா. விராட் கோலி ஆற்றலுடன் வழி நடத்த ஆர்வமாக உள்ளார். அவர் எங்களை உடற்தகுதியாக மாற்றினார். கேப்டனாக இல்லாவிட்டாலும் விராட் கோலிதான் தலைவராக இருக்கிறார். கேப்டன் என்பது வெறும் தலைப்பு. ஏனெனில் 11 பேர் மட்டுமே ஒரு அணியை நடத்துகிறார்கள் என்று பும்ரா கூறினார்.
மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி இரக்கமற்றவராகிவிட்டார்… அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்
பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகரீகமான இந்தியாவின் முகத்தில் ஒரு கறை. இதுபோன்ற சம்பவம் நடந்து போராட்டம் நடத்தியவர்கள் தாக்கப்பட்டதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி வெட்கப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் காட்டாட்சி நடக்கிறது. மம்தா பானர்ஜி இரக்கமற்றவராகிவிட்டார். இந்நிலை மாறி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியது.
Discussion about this post