மத்திய அரசின் மலிவு விலை வாடகை வீடு திட்டம் குறித்து ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை…. அண்ணாமலை கேள்வி
மத்திய அரசின் மலிவு விலையில் வாடகை வீடுகள் வழங்கும் திட்டம் குறித்து ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி. வல்லம்-வடகாலில் திறக்கப்பட்டுள்ள தங்கும் விடுதி மத்திய அரசின் மானியம் மற்றும் வங்கி கடனுதவியில் கட்டப்பட்டுள்ளது என்றார். மலிவு விலையில் வாடகை வீடுகள் கட்டும் திட்டத்தை, வழக்கம் போல் மக்களுக்கு தெரிவிக்காமல், முதல்வர் புறக்கணித்து விட்டாரா என, அண்ணாமலை கேட்டுள்ளார்.
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதறியது…
ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்து சிதறியது. நிலநடுக்கத்தால் ஷிவேலுச் எரிமலை வெடித்ததாகவும், அதில் இருந்து வெளியேறிய சாம்பல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவியதாகவும் கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்..
வாரணாசியில் இருந்து அகமதாபாத் செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே 22 பெட்டிகள் தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், சீரமைப்பு பணிக்கு பிறகு உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.
லண்டனில் ஏர் இந்தியா விமானப் பணிப் பெண் மீது தாக்குதல்….
லண்டனில் ஏர் இந்தியா விமானப் பணிப் பெண் மீது தாக்குதல். ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்கள் லண்டனில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபோது, நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே புகுந்து பணிப்பெண் ஒருவரை சுத்தியலால் தாக்கினார்.
மம்தா பானர்ஜி அரசு மீது நம்பிக்கை இல்லை, கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை பேட்டி
மம்தா பானர்ஜி அரசு மீது நம்பிக்கை இல்லை, கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை பேட்டி. மம்தா பானர்ஜி மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், மேற்கு வங்க அரசு வழங்கும் நிவாரணத்தை ஏற்க மாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…
நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். இதுகுறித்து தகவல் அறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸுடன் தனது கட்சி இணைக்க போவதாக தகவல்
குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸுடன் தனது கட்சி இணைக்க போவதாக தகவல். ஜம்மு காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் குலாம் நபி ஆசாத்.
நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
நிர்மலா சீதாராமனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து. நாட்டின் வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்திற்காக எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரது நீண்ட ஆயுளுக்காக இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Discussion about this post