2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்…. அண்ணாமலை
2026 வருடம் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரத்தில், தமிழக பாஜக உறுப்பினர் சேர்க்கை 2024 வருட மாநில பயிலரங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடந்தது. உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சி நமது பாஜக என்பதில் பெருமை கொள்கிறோம். மோடி நமது பாரதப் பிரதமர், நல்லாட்சி மற்றும் தலைமைத்துவத்தால் அனைத்துத் தரப்பு மக்களும் கவரப்பட்டு பாஜகவில் இணைவதைப் பார்க்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி இன்று காலை வெளியிடப்படும்… விஜய் அறிவிப்பு
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 2 தேதி கட்சி தொடங்கும் என்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.வரும் 2026 ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக விஜய் அறிவித்துள்ளார். ஆனால், கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.
மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதத்தை ஆரம்பிக்கலாம்…. வழிபடுங்களின் நம்பிக்கை
விநாயகப் பெருமானை வழிபட உகந்த நாள் ‘சங்கடஹர சதுர்த்தி’. மேலும், விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது கூடுதல் சிறப்பு. மகா சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபடுவது, வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும் வழிபட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி இன்று மகா சங்கடஹர சதுர்த்தி. சதுர்த்தி திதி இன்று மாலை 6.15 மணிக்கு தொடங்கி நாளை மாலை 3.48 மணிக்கு நிறைவடைகிறது. திதி மாலையில் தொடங்கினாலும், சூரிய உதயம் முதல் சந்திரன் உதயம் வரை விரதம் இருப்பது மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. பொதுவாக சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை மாலையில் தான் செய்ய வேண்டும். விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகு, சந்திரனை தரிசனம் செய்த பின்னரே சங்கடஹர சதுர்த்தி விரதத்தை நிறைவு செய்வது வழக்கம்.
வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிப்பு
பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஸ்ரீஜேஷுக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்ரீஜேஷுக்கு ரூபாய் 2 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா அச்சுதபுரம் பொருளாதார மண்டலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அச்சுதபுரம் சிறப்பு பொருளாதார மண்டவ தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக அனகப்பள்ளி மாவட்ட ஆட்சியர் விஜய கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி… கோப்பையுடன் விநாயகர் கோவிலில் ரோஹித் சர்மா, ஜெய்ஷா… சாமி தரிசனம்
T 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி. உலகக் கோப்பையுடன் விநாயகர் கோவிலில் ரோஹித் சர்மா, ஜெய்ஷா சாமி தரிசனம். T 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி T 20 உலக கோப்பையை 2 முறையாக கைப்பற்றியது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபாரமாக பந்துவீச, இலங்கை 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபாரமாக பந்துவீச, இலங்கை 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இருப்பதால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராக கருதப்படுகிறது. இதனிடையே இங்கிலாந்து அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியதால் புதிய கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு தனஞ்சய டி சில்வா தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராபோர்டில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
Discussion about this post