நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது.
நேபாளத்தில் உள்ள பொக்ராவில் இருந்து காத்மாண்டு செல்லும் பேருந்தில் 40 இந்தியர்கள் பயணம் செய்தனர். தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றின் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பயணிகள் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.
ஆற்றில் விழுந்த 16 பேர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர். 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இறந்த அனைவரும் இந்தியர்களா? என்பது பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.