வங்கதேசத்தில் வன்முறை காரணமாக பலர் இந்தியாவுக்குள் நுழைய முயற்சி செய்து வருகின்றனர்.
மேகாலயாவின் கிழக்கு ஜெயின் இந்தியா மலைகள் வழியாக 6 பேர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சிப்பதாக எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து இந்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ரட்சேரா பகுதியில் அவர்களை கைது செய்தனர்.
விசாரணையில், அவர்களில் 4 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், 2 பேர் உள்ளூர்வாசிகள் என்பதும், அவர்களுக்கு எல்லையை கடக்க உதவியது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பலர் இந்திய எல்லையை கடக்க முயற்சிப்பதாக வெளியான தகவலையடுத்து எல்லை பாதுகாப்பு படை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
Discussion about this post