டொனால்ட் ட்ரம்பைக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த 66 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெக்சிகோ-அமெரிக்க எல்லைப் பகுதியான அரிசோனாவில் உள்ள கொச்சிஸ் கவுண்டியில் இருந்து டொனால்ட் டிரம்பை கொலை செய்யப்போவதாக சமூக வலைதளத்தில் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்காக கொச்சிஸ் கவுண்டிக்கு வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.