சர்வதேச வர்த்தகத்திற்கு சீனாவைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை மாறி இந்தியாவை நம்பியுள்ள உலக நாடுகள்….
சர்வதேச வர்த்தகத்திற்கு சீனாவைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை மாறி இந்தியாவை நம்பியுள்ள உலக நாடுகள். பிரதமர் மோடியின் கதி சக்தி திட்டத்தின் நோக்கத்தின்படி சுமார் 10 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில் துறைமுகம் கட்டப்படுகிறது. இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் கப்பல்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இந்தியாவின் கப்பல் துறையின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தாலும், சீனாவுக்கு மாற்றாக இந்தியா விரைவில் உருவாகும் என்று ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் தலைவர் உன்மேஷ் ஷரத் வாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்பைக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த 66 வயது நபர் ஒருவர் கைது….
டொனால்ட் ட்ரம்பைக் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்த 66 வயது நபர் ஒருவர் கைது. மெக்சிகோ அமெரிக்க எல்லைப் பகுதியான அரிசோனாவில் உள்ள கொச்சிஸ் கவுண்டியில் இருந்து டொனால்ட் டிரம்பை கொலை செய்யப்போவதாக சமூக வலைதளத்தில் அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்காக கொச்சிஸ் கவுண்டிக்கு வந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை…
காஷ்மீர் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை. இந்நிலையில், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர், வாட்டர்கெம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், என்கவுன்ட்டர் நடந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெர்மனியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி
ஜெர்மனியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் பலி. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரப்பட மாட்டாது… அமித்ஷா திட்டவட்டம்
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரப்பட மாட்டாது அமித்ஷா திட்டவட்டம். இந்நிலையில், சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை ஒழிப்பது தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவருவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமித்ஷா, சிறப்பு அந்தஸ்து சட்டம் 370 ஜம்மு காஷ்மீருக்கு இப்போதும் என்றும் இடமில்லை. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரப்பட மாட்டாது என்றார்.
சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாசா வெளியீடு…
சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாசா வெளியீடு. இருவரும் ஆராய்ச்சியை முடித்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 80 நாட்களாக சிக்கியுள்ளனர், அவர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்ப உள்ளது. இந்நிலையில், விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா மற்றும் புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. விண்வெளிக்கு சென்று 8 நாட்கள் ஆராய்ச்சி செய்த இருவரும் தற்போது 8 மாதங்கள் விண்வெளியில் தங்கியுள்ளனர்.
வரதட்சணை கொடுமை மருமகள் 6வது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்ட கொடூர சம்பவம்….
வரதட்சணை கொடுமை மருமகள் 6 வது மாடியில் இருந்து கீழே தள்ளப்பட்ட கொடூர சம்பவம். இதற்கிடையில், ஷபீர் முக்தாரின் தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் மருமகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 31 தேதி மருமகள் மற்றும் ஷபீரின் குடும்பத்தினருக்கு இடையே வரதட்சணை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷபீரின் குடும்பத்தினர் மருமகளை அடுக்குமாடி குடியிருப்பின் 6 வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். சம்பவத்தில் பலத்த காயமடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஷபீர் முக்தார் ஷேக், அவரது தாய், மாமா நூர் முகமது மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post