பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை… பிரதமர் மோடி
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் லக்பதி திதி சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி இன்று பொதுமக்களிடம் உரை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் நமது அரசு தொடர்ந்து கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. எண்ணற்ற சகோதரிகள் மற்றும் மகள்கள் இன்று கூடியிருக்கிறார்கள். முன்னதாக, எஃப் ஐ ஆர் சரியான நேரத்தில் பதிவு செய்யப்படுவதில்லை என புகார் எழுந்தது. வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் மூலம் இதுபோன்ற பல தடைகளை நீக்கியுள்ளோம் என்றார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து
ஜனாதிபதி திரௌபதி முர்மு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து. ஜென்மாஷ்டமி நாளில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குவோம். இந்த மகிழ்ச்சித் திருவிழா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக இலட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணிக்க தூண்டுகிறது. ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையிலான உரையாடல் முழு மனிதகுலத்திற்கும் உத்வேகம் மற்றும் அறிவொளியின் நித்திய ஆதாரமாகும். நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பாடுபடுவேன் என்று திரௌபதி முர்மு உறுதியளித்துள்ளார்.
இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கனவுகள் நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்… எடப்பாடி பழனிசாமி
இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கனவுகள் நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி. 7.5 சதவீத இடஒதுக்கீட்டால், 2020 435, 2021 555, 2022 584, 2023 625 என மருத்துவக் கனவுகள் நனவாகும் அரசுப் பள்ளி மாணவர்களின் முகங்களைப் பார்ப்பதில் நான் எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோல், இந்த ஆண்டும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது, 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மகத்துவத்தை பறைசாற்றும் நேர்காணல்களைப் பார்த்து நானும் மகிழ்ந்தேன் என எடப்பாடி பழனிசாமி.
ஏமன் கடற்கரை அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு…
ஏமன் கடற்கரை அருகே அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழப்பு. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி அகதிகளாக செல்கின்றனர். ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்தாலும், ஏமனுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எத்தியோப்பியாவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஏமன் கடற்கரை அருகே எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. படகில் மொத்தம் 27 பேர் பயணம் செய்ததாகவும், 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 14 பேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ஐ நா கூறுகிறது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து முன்னணி வீரர் விலகியுள்ளார்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து முன்னணி வீரர் விலகியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1.0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 2 டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 29 தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் சேர்க்கப்பட்டுள்ளார்.
Discussion about this post