தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்… என அண்ணாமலைக்கு தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை
தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். அண்ணாமலைக்கு அறிவுரை வழங்கிய தமிழிசை சௌந்தரராஜன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்த நிலையில், அவருக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்கக்கூடாது. பதவி கிடைக்காததற்கு சகோதரி விஜயதரணி ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது சகஜம். ஒவ்வொருவருக்கும் பாஜகவில் பதவி கிடைக்கும், அதற்கு சிறிது நேரம் ஆகலாம், ஆனால் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்… அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு
லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு. லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில். லடாக்கில் ஜன்ஸ்கர், திராஸ், ஷாம், நுப்ரா, சங்துங் ஆகிய ஐந்து மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதன் மூலம், மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களை எளிதில் சென்றடையும். வளர்ச்சியடைந்த மற்றும் வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ஜாம்பியாவில் இடிந்து விழுந்த சுரங்கத்தில் சிக்கி, 8 பேர்கள் பலி
ஜாம்பியாவில் இடிந்து விழுந்த சுரங்கத்தில் சிக்கி 8 பேர்கள் பலி. சாம்பியாவின் லுசாகா மாகாணத்தில் உள்ள சாங்வே மாவட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்கு கற்களை எடுத்துச் செல்லும் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பணியை முடித்துக் கொண்டிருந்த போது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில், ஓட்டுநர் ஒருவர் மீட்கப்பட்டார். அவர் இடிபாடுகளில் இருந்து ஓரளவு மீட்கப்பட்டதாகவும், பலர் உள்ளே சிக்கியிருப்பதாகவும் கூறினார். மேலும் அவர்களை மீட்குமாறு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் மீட்பு குழுவினர் 8 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என காவல் துறையின் செய்தி தொடர்பாளர் ரே ஹமூங்கா கூறினார்.
இந்திய கடலோர காவல்படையினர், கடலில் தத்தளித்த 11 பேர் மீட்பு…
இந்திய கடலோர காவல்படையினர், கடலில் தத்தளித்த 11 பேர் மீட்பு. கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, சாகர் தீவில் தெற்கே 90 கடல் மைல் தொலைவில் சரக்குக் கப்பல் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் சென்னை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்தது. கொல்கத்தாவில் உள்ள ஐசிஜியின் பிராந்திய தலைமையகம் உடனடியாக இரண்டு ஐசிஜி கப்பல்களையும் ஒரு டோர்னியர் விமானத்தையும் அந்த இடத்திற்கு அனுப்பியது. டோர்னியர் விமானத்தின் வழிகாட்டுதலுடன், ஐசிஜி கப்பல் சம்பவ இடத்தை அடைந்தது. பின்னர் கடலில் தத்தளித்த 11 பேர் மீட்கப்பட்டனர்.
எம்எல்ஏ – நடிகர் முகேஷ் உள்ளிட்ட 4 நடிகர்கள் மீது கேரள நடிகை ஒருவர் பாலியல் புகார்
கொல்லம் எம்எல்ஏ மற்றும் நடிகர் முகேஷ் உள்ளிட்ட 4 நடிகர்கள் மீது கேரள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். கேரளாவில் தற்போது பல நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். மலையாள நடிகர், இயக்குனர் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் ரஞ்சித் மீது மேற்கு வங்க நடிகை ஸ்ரீ லேகா மித்ரா பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து, சமீபத்தில், நடிகர் ரஞ்சித் கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், கொல்லம் எம்எல்ஏ, நடிகர் முகேஷ் உள்ளிட்ட 4 நடிகர்கள் மீது கேரள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி கொல்லத்தில் உள்ள முகேஷ் இல்லம் நோக்கி பேரணி நடைபெற்றது.
லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து…
லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து. லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது சிறந்த நிர்வாகம் மற்றும் செழிப்புக்கான ஒரு படியாகும். ஜான்ஸ்கார், த்ராஸ், ஷாம், நுப்ரா, சங்துங் அதிக கவனம் பெறும். இது மக்களுக்கு சேவைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வரும். லடாக் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Discussion about this post