தடையின்றி நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட்டை தடை செய்ய வேண்டும்… தமிழக பாஜக
தடையின்றி நடத்தப்படும் ஹேப்பி ஸ்ட்ரீட் தடை செய்ய வேண்டும் தமிழக பாஜக. வணிக நோக்கில் கலை நிகழ்ச்சிகள் என்ற பெயரில் நடுத்தெருவில் நடைபெறும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் கலாசார சீரழிவு சூழலை உருவாக்கி வருவது அதிர்ச்சியளிக்கிறது என ஏஎன்எஸ் பிரசாந்த் கூறினார். இந்த நிகழ்ச்சியின் பின்னணியில் வணிக நோக்கமும், கலாச்சாரத்தை கெடுக்கும் நோக்கமும் இருப்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார். மேலும், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பலர் தங்களை மறந்து விடுவதால் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாந்த் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயம்
சேலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர்கள் காயம். சேலத்தில் இருந்து வலசையூர் நோக்கி தனியார் பஸ் தேவாங்கர் காலனி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. பேருந்தில் பயணம் செய்து காயமடைந்த 20 நபர்களை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், லாரியில் சிக்கிய டிரைவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு, சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சென்னை புரசைவாக்கத்தில் கடந்த ஏப்ரல் 15 தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதம் செலவிடப்படவில்லை என தயாநிதி மாறன் மீது குற்றம்சாட்டினார். இதையடுத்து, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆஜரானார். இதையடுத்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 19 தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு. ஃபார்முலா 4 கார் பந்தயம் வரும் 31 மற்றும் செப்டம்பர் 1 தேதிகளில் சென்னை தீவுக்கூட்டத்தை சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, 8000 பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் பிஎன்எஸ் பிரசாத் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம்…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பாஜகவினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம். தஞ்சை மாவட்டம் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாஜக மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு அதிமுகவினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிமுகவுக்கு எதிராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆர்த்திராஜ் தலைமையில் கலந்து கொண்டவர்கள் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
திரிபுராவில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை விரைவில் அனுப்புவதாக ம… அமைச்சர் அமித்ஷா உறுதி
திரிபுராவில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை விரைவில் அனுப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி. திரிபுராவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 17 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 137000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை விரைவில் அனுப்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாகா தெரிவித்தார். மத்தியக் குழு வரும்போது, வெள்ளத்தால் ஏற்பட்ட பேரிடர்களின் உண்மைப் படத்தை மாநில அரசு முன்வைக்கும் என்றார்.
கிழக்கு சூடானில் அணை உடைந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
கிழக்கு சூடானில் அணை உடைந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். இதுகுறித்து, செங்கடல் மாநில நீர் கழக தலைவர் உமர் இசா தாஹிர் கூறுகையில், அணை உடைந்ததால், தலைநகர் போர்ட் சூடான் அருகே உள்ள கிராமங்கள் அழிந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள். அணை பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உடனடி மீட்பு பணிகள் தேவை. தண்ணீரில் தப்புபவர்களுக்கு தேள், பாம்பு கடி ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கிடையில் பெய்த கனமழையால் அணை இடிந்து, வண்டல் மண்ணுடன் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள கிராமங்கள் அழிந்தன. இதனால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனார்.
Discussion about this post