கரூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது
கரூரில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது. கரூரில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருச்சி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்த வேண்டும்… ஜனாதிபதி திரெளபதி முர்மு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்த வேண்டும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, வக்கிரமான நோக்கத்துடன் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களைக் கண்டித்தும், பெண்களை அதிகாரமற்றவர்கள், தகுதியற்றவர்கள், அறிவற்றவர்கள் என்று எண்ணும் மனப்பான்மையைக் கைவிட ஒட்டுமொத்த தேசமும் ஒன்று திரள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பெண்கள் அச்ச உணர்வில் இருந்து விடுபட்டு, விடுதலைப் பாதையில் முன்னேறுவதில் உள்ள தடைகளை அகற்ற வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி திரெளபதி முர்மு, பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
யானை சின்னம் விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை….
யானை சின்னம் விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை. தமிழ்நாடு வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், கடந்த 22 தேதி சென்னையில் கட்சியின் புதிய கொடியை அறிமுகம் செய்தார். நடுவில் 2 யானைகளுக்கு நடுவே வாழைக் கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு என்று பொறிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில் கட்சி கொடி குறித்த விளக்கம் குறித்து விளக்கமளிப்பதாக விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் உள்ள யானை சின்னம் எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. அந்த மனுவில், எங்கள் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியில் பயன்படுத்துகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய சின்னமாகும். இந்நிலையில் புதிய கட்சி தொடங்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை படத்தை பயன்படுத்துகிறார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் விஜய் எங்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை, அதை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விஜய் கட்சி கொடியில் உள்ள யானையின் சட்ட விரோத படத்தை அகற்ற வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றிபெற கடுமையாக உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து
ஜன்தன் யோஜனா திட்டம் வெற்றிபெற கடுமையாக உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2014 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஏழைகள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்க ஜன்தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கினார். இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்ச இருப்பு இல்லாமல் வங்கிக் கணக்கை பராமரிக்கலாம். இது கோடிக்கணக்கான இந்தியர்களை முறையான நிதி அமைப்புக்குள் கொண்டு வந்தது. ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்ட 10 வது ஆண்டு விழா ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது. அனைத்து பயனாளிகளுக்கும் வாழ்த்துக்கள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதில், கோடிக்கணக்கான மக்களுக்கு. ஜன்தன் யோஜனா திட்டம் குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதில் முன்னணியில் உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
ஜார்கண்ட் மாநில நலனுக்காக பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக சம்பய் சோரன் தகவல்
ஜார்கண்ட் மாநில நலனுக்காக பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக சம்பய் சோரன் தகவல். ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் ராஞ்சியில் தனது ஆதரவாளர்களுடன் ஆகஸ்ட் 30 தேதி பாஜகவில் இணைகிறார். இந்நிலையில், பாஜகவில் சேருவதற்காக சம்பய் சோரன் சமீபத்தில் டெல்லி சென்றார். மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பாஜகவில் சேரலாம் என்று கூறப்படுகிறது. சம்பய் சோரன் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உடனிருந்தார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57 வது முறையாக நீட்டிப்பு. இந்நிலையில், நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து செந்தில் பாலாஜி வீடியோ மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு வரும் 3 தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் முதன்மை மேலாளராக பணியாற்றிய ஹரீஷ்குமார் ஆஜராகாததால் இன்று குறுக்கு விசாரணை நடைபெறவில்லை.
Discussion about this post