மின் திட்டங்களுக்கான முதல் தொகுதி நிதியை இலங்கைக்கு வழங்கிய இந்தியா
மின் திட்டங்களுக்கான முதல் தொகுதி நிதியை இலங்கைக்கு வழங்கிய இந்தியா. இலங்கையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய 3 தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்பை நிறுவுவதற்கான மின்சாரத் திட்டங்கள் இந்திய மானிய உதவியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 3 தீவுகளைச் சேர்ந்த மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களுக்கு 11 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 92 கோடி) நிதியுதவி அளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது.
பாரத் டோஜோ, யாத்திரை விரைவில் துவங்கும்… ராகுல் காந்தி அறிவிப்பு
பாரத் தற்காப்புக் கலை பயிற்சி யாத்திரை (பாரத் டோஜோ) விரைவில் தொடங்கும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2022 ல் கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, மணிப்பூரிலிருந்து மும்பை வரை பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை (ஜோடோ யாத்ரா) நடத்தினார். இந்நிலையில், கடந்த பாரத் ஒற்றுமை நீதி யாத்திரையின் போது குழந்தைகளுடன் அவர் செய்த தற்காப்பு கலை பயிற்சிகள் இதில் அடங்கும். மேலும், ‘பாரத் ஜோடோ’ யாத்திரை போல், ‘பாரத் டோஜோ’ யாத்திரையும் விரைவில் துவங்கும் என, ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
பழனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த வேண்டும்… வானதி சீனிவாசன்
பழனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்த வேண்டும் என்கிறார் வானதி சீனிவாசன். தமிழக அரசு சார்பில் பழனியில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில், இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகைக்குட்பட்ட கோயில்களில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் முருக பக்தி இலக்கியங்களை மையமாக வைத்துப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். திருவிழாக் காலங்களில் முருகன் கோவில்களில் மாணவ, மாணவியர் கந்தஷஷ்டி ஓதுவார்கள். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இயங்கும் கல்லூரிகளில் முருகப்பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன அதை உடைனே நடைமுறை செய்ய வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறினார்.
அமெரிக்காவில் விமானம் நடுவானில் குலுங்கியதில் 7 பேர் படுகாயம்
அமெரிக்காவில் விமானம் நடுவானில் குலுங்கியதில் 7 பேர் படுகாயம். UA-1196 என்ற பயணிகள் விமானம் மெக்சிகோவின் கான்கன் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சிகாகோவிற்கு புறப்பட்டது. விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-900 விமானத்தில் பணியாளர்கள் உட்பட 179 பேர் இருந்தனர். லூசியானா நகரை நெருங்கும் போது விமானம் திடீரென நடுவானில் குலுங்கியது. அப்போது பயணிகள் இருக்கையில் இருந்து நகர்ந்து முன் இருக்கையில் மோதினர். அச்சமடைந்த பயணிகள் அலறினர். இதையடுத்து விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அந்த நேரத்தில் டென்னசி விமான நிலையத்தில் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, விமானம் டென்னசி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்புக் குழுவினர் பலத்த காயமடைந்த 7 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம். சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நாளை முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தீவுத்திடலை முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்: தீவுத்திடலை சுற்றியுள்ள முக்கிய சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ வி ஆர் சாலை, ஆர் ஏ மூன்றம் சாலை, முத்துசாமி முனை மற்றும் பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்கள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி நாட்டின் முதல் கோடீஸ்வரர் அதானி.
முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி நாட்டின் முதல் கோடீஸ்வரர் அதானி. 2024 ஆம் ஆண்டுக்கான ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் பிடித்தார். நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 11.6 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகம். நாட்டில் மொத்தம் 334 கோடீஸ்வரர்கள் இருப்பதாக இந்தப் பட்டியல் கூறுகிறது. 10.1 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தில் உள்ளார். ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் 3.14 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
Discussion about this post