பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவின் நித்தேஷ் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார்
பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியாவின் நித்தேஷ் குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் பேட்மிண்டனில், ஆடவர் ஒற்றையர் SL3 இன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
தவெக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ்…
தவெக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ். மாநாட்டுக்கு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மாநாட்டு மேடையின் அகலம், நீளம், மருத்துவ வசதிகள், பார்க்கிங் வசதி உள்ளிட்டவை குறித்து கேட்டு விக்கிரவாண்டி போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதற்கு, மாநாடு அனுமதிக்கப்படுமா, மறுக்கப்படுமா என்பது, தவெக நிர்வாகிகள் அளிக்கும் பதிலை பொறுத்தே தெரியவரும்.
தமிழகத்தில் மத மாற்றம் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் வருத்தம்….
தமிழகத்தில் மத மாற்றம் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் வேதனை. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மத மாற்ற நடவடிக்கைகள் வருத்தம் அளிப்பதாக கூறிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நீதி கிடைக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வக்பு வாரியம் தொடர்பான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக எம்எல்ஏ அமத்துல்லா கான் அமலாக்கத்துறையால் கைது
வக்பு வாரியம் தொடர்பான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக எம்எல்ஏ அமத்துல்லா கான் அமலாக்கத்துறையால் கைது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமத்துல்லா கான், தனக்கு எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டினார். அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனையின்போது, அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் டெல்லி போலீஸாரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செபி தலைவர் மாதவி பூரி புச் தனியார் வங்கியில் ரூ.16 கோடி சம்பளம் வாங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டு
செபி தலைவர் மாதவி பூரி புச் தனியார் வங்கியில் 16 கோடி சம்பளம் வாங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டு. செபியின் முழுநேர உறுப்பினராக இருப்பதால் ஏன் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து நீங்கள் பணம் பெற்றுள்ளீர்கள் என்பதை அறிய விரும்புகிறோம். இது செபி விதிகளின் பிரிவு 54 ஐ மீறுவதாகும். எனவே, செபி தலைவர் மாதவி பூரி புச் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,” என்றார்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல்…
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல். எண்ணெய் டேங்கர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. எரியும் கப்பலில் 1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றி வந்ததால் கப்பல் முழுவதும் தீ பரவினால் கடல் பரப்பில் பெரும் பாதிப்பு ஏற்படும். அந்த கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் கடற்படையினர் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும்… தேர்வுத்துறை உத்தரவு…
10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயம் எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு. சிறுபான்மை மொழி மாணவர்களும் தமிழ் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களின் 13 வகையான விவரங்களை சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post